46 வயசில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன்... தடதடக்கும் பின்னணி..!

 


பள்ளி மாணவிகள் பதின்பருவத்தில் பாதை தவறி போகும் சம்பவங்கள் இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அவர்களின் பலவீனத்தை உணர்ந்து கயவர்கள் எளிதாக அவர்களை தங்களது ஆசை வலையில் வீழ்த்தி காரியம் முடிந்ததும் கழற்றி விடுவதால் பாதிக்கப்படும் சிறுமிகள் சிறிய வயதிலேயே மனதளவில் உடைந்து விடுகின்றனர். இதனை தடுக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த கொடுமைகள் தொடர் கதையாகத்தான் உள்ளது.


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10ம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி கூலி வேலை செய்து வருகிறார்.


இந்தப் பெண்ணிடம் பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி பழகியுள்ளார். தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பாலசுப்பிரமணியன் அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.


இந்த நிலையில் அந்த சிறுமி மூன்று மாதம் கர்ப்பம் தரித்துள்ளார். அந்த சிறுமி பாலசுப்பிரமணியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார், அதற்கு பாலசுப்புரமணியன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி கடந்த ஒரு வாரமாக அவருடன் பேசுவதை நிறுத்தி வந்துள்ளார்.



இதில் அந்த சிறுமி பாலசுப்பிரமணியன் குறித்து விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளது என்பது தெரிய வந்ததையடுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார் என புகார் அளித்தார்.


16 வயது பெண் பாலியல் வன்கொடுமை என்பதால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லால்குடி அனைத்து மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்தியாயினி. பாலசுப்பிரமணியனை மண்ணச்சநல்லூர் அருகே இருப்பதாக கிடைத்த தகவலின் படி அவரை விசாரணை செய்ததில் இவர் அந்தப் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


No comments